கடவுள் துகளும் தில்லை நடராஜரும்

கடவுள் துகளும் தில்லை நடராஜரும்
தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமானின் மாதிரி சிலை.

கடவுள் துகள் (God Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படுவது அணுத்துகள் இயற்பியலில் (Particle Physics) நீண்ட காலத்திற்கு நிரூபிக்க இயலாமல் இருந்து, சமீபத்தில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான செர்ண் (CERN – ஆங்கிலத்தில், European Organization for Nuclear Research / பிரெஞ்சில், Conseil Européen pour la Recherche Nucléaire) மூலம் நிரூபிக்கப் பட்டதுமான ஒரு முக்கியமான அணுத்துகள். இதற்கும் நமது தில்லைக் கூத்தராம் நடராஜப் பெருமானுக்கும் என்ன சம்பந்தம்? அதை மிகவும் விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) / கடவுள் துகள்
ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) / கடவுள் துகள்

ஹிக்ஸ் போஸான் என்றால் என்ன?

1964 ஆம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் (Peter Higgs) எனும் விஞ்ஞானி தான் எழுதிருந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் உலகம் உருவான புதிதில் நிறை (Mass) இல்லாமல் இருந்த அணுத்துகள்கள் நொடிப் பொழுதுக்கும் குறைவான நேரத்தில் ஏதோவொரு சக்தி மண்டலத்துடன் (Quantum Field) இணைந்தபோது நிறையை அடைந்து, போஸான் (Boson) எனப்படும் தனக்குள்ளே சுழற்சியுடைய (Intrinsic Spin), சக்தியூட்டப் பட்ட (Quantum Excitation) அணுத்துகள்களாக மாறியிருக்கின்றன என்று கருத்து தெரிவித்திருந்தார். இது அப்போது நிரூபிக்க இயலாத, ஏற்றுக்கொள்ளக் கடினமான ஒரு கருத்தாக இருந்தது. ஏனெனில், அதுவரை அறிவியல் உலகம் அணுத்துகள்களோடு நான்கு வகை சக்தி மண்டலங்கள் மட்டுமே செயல்படுவதாக நம்பிக்கொண்டு இருந்தன (வலுகுறைந்த அணுசக்தி / Weak Nuclear Force, வலுமிகுந்த அணுசக்தி / Strong Nuclear Force, மின்காந்த அணுசக்தி / Electromagnetism, புவியீர்ப்பு அணுசக்தி / Gravity). பிறகு வந்தப் பல விஞ்ஞானிகளும் இவரைப் போலவே கருத்துக்களை முன்வைக்க, இவரின் கருத்துக்களை நிரூபிக்கக்கூடிய அளவு தொழில்நுட்பம் அப்போது இல்லையென்ற போதிலும், எதிர்காலத்தில் வரலாமே என்பதால் அவர் ஆராய்ச்சியில் சொல்லப்பட்டிருந்த விஷயங்களுக்கு அவர் பெயரையே வைத்தார்கள். அவர் கூறிய சக்திமண்டலத்தை ஹிக்ஸ் ஃபீல்ட் (Higgs Field) என்றும், அவர் கூறிய அணுத்துகள் போஸானை ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றும் பெயரிட்டனர்.

செர்ண் நிறுவனத்தின் முகப்பில் தில்லை நடராஜர் சிலை
செர்ண் நிறுவனத்தின் முகப்பில் தில்லை நடராஜர் சிலை

செர்ண் நிறுவனத்தில் தில்லை நடராஜர்

ஹிக்ஸ்ஸின் ஆராய்ச்சியை நிரூபிக்கக் கிட்டத்தட்ட 50 வருடங்களாக பலர் முயற்சி செய்தும் பலன் கிடைக்காமலிருந்தபோது, ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான செர்ண் (CERN) ஒரு மிகப் பெரும் முயற்சியை மேற்கொள்ள முன்வந்தது. அதாவது, அறிவியல் ஏற்கனவே அறிந்திருந்த சக்திமண்டலங்களை வைத்து, ஹிக்ஸ் கூறியிருந்த சக்திமண்டலத்தை செயற்கையாக உருவாக்க முடியுமா என்பதையும், அவ்வாறு உருவாக்கிவிட்டால் அந்த சக்திமண்டலத்தோடு அணுத்துகள்களை மோதவிட்டு அவைகள் ஹிக்ஸ் போஸான்களாக மாற்ற முடியுமா என்பதையும் அறிந்து கொள்ள முயன்றது. அதற்காக தங்கள் நிறுவனம் இருந்த நாட்டின் எல்லையில் (பிரான்சு – சுவிட்சர்லாந்து), உலகத்திலேயே மிகப் பெரிய ஹாட்ரான் மோதுகுழாய் (Large Hadron Collider) ஒன்றை நிலத்திற்குக் கீழே 175 மீட்டர் (574 அடி) ஆழத்தில் 27 கிலோமீட்டர் (17 மைல்) சுற்றளவிற்கு வட்டவடிவமாக போட முயன்றார்கள். இந்த முயற்சியை 1998 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2008 ஆம் ஆண்டு வரை (10 வருடங்கள்) மேற்கொண்டது அந்த நிறுவனம். இந்த மாபெரும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட இந்திய விஞ்ஞானிகளில் முனைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் (Dr. A.P.J. Abdul Kalam) அவர்களும் இருந்தார். இவ்வளவு பெரிய அணுத்துகள் மோதுகுழாயை பூமிக்கு அடியில் புதைத்து வைத்தால் அதனால் பூகம்பம் (Earthquake) ஏதாவது வந்துவிடுமோ என்று அனைவருமே பயப்பட்டபோது, “கவலைப்பட வேண்டாம், ஒரு நடராஜர் சிலையை வைத்துவிட்டு ஆரம்பியுங்கள் போதும்.” என்று கலாம் அவர்கள் கூறினார். கலாம் அவர்களின் அறிவுத்திறனையும் அவர் செய்த பல அறிவியல் சாதனைகளையும் அறிந்திருந்த விஞ்ஞானிகள், அவர் இஸ்லாமிய இனத்தவராக இருந்தாலும் ஒரு ஹிந்து மதக் கடவுளை, அதுவும் சிலை வழிபாட்டில் நம்பிக்கையில்லாத மதத்தவர் ஒரு சிலையை வைக்கச் சொல்லுகின்றாரே, அதனால் என்ன செய்ய முடியும்? என்று அவர்களுக்கு சந்தேகம் இருந்தாலும், அவர்மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தது. கலாம் அவர்கள் இந்திய அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy) மூலம் 2 மீட்டர் (6.56 அடி) உயரமுள்ள தில்லை நடராஜர் சிலையை, 1960 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கும் செர்ண் நிறுவனத்திற்கும் இடையே இருக்கும் நட்பின் அடையாளப் பரிசாக வழங்கச் செய்தார். இதைத் தங்கள் தலைமையகத்திற்கு அருகாமையிலிருக்கும் 39 மற்றும் 40 ஆம் எண் கட்டடங்களுக்கு நடுவில் பொதுமக்கள் யாவரும் பார்க்கும் வண்ணம் 2004 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி அன்று நிறுவி, அச்சிலைக்கு விண்வெளி நடனம் புரிபவர் (Cosmic Dancer) என்று பெயரும் வைத்தனர். நடராஜரின் விண்வெளி நடனத்திற்கும் அணுக்களின் விண்வெளி அசைவுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் கருதிக்கொண்டனர்.

பெரிய ஹாட்ரான் மோதுகுழாய் (Large Hadron Collider)

செர்ண் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு

பெரிய ஹாட்ரான் மோதுகுழாயை செயல்படுத்திய பிறகு செர்ண் விஞ்ஞானிகள் அதில் ப்ரோட்டான் (Proton) அணுத்துகள்களையும், நியூட்ரான் (Neutron) அணுத்துகள்களையும், அணுமின்சாரம் மூலம் சக்தியூட்டி (Particle Acceleration) அவற்றை ஹீலியம் திரவத்தின் (Superfluid Helium 4) மூலம் அதிக அளவு கடுங்குளிரூட்டப்பட்ட (Cryogenics) காற்றுகூட இல்லாத (Vacuum) குழாய்களில் நேரெதிர் திசைகளில் ஒளிக்கற்றைகளாக (Beamline) கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் (Speed of Light) சக்திவாய்ந்த மின்காந்தங்களின் (Superconducting Magnets) மூலம் சுற்றவிட்டு, அவற்றை ஒரு புள்ளியில் ஒன்றோடொன்று மோதவிட்டு (Inelastic Collision) ஆராய்ச்சி செய்தனர். அவ்வாறு சக்தியூட்டப்பட்ட ப்ரோட்டான் அணுத்துகள்கள் 6.5 டெரா-எலக்ட்ரான்வோல்ட் (Tera-Electronvolt) அளவுக்கு சக்திபெற்று (இதுவொரு உலக சாதனை) நியூட்ரான்களோடு மோதியபோது அவர்கள் ஆச்சரியப்படும்படி இரண்டு அணுத்துகள்கள் காற்றுக்கூட இல்லாத வெற்றிடத்திலிருந்து உருவாகின. இதில் ஒன்றுதான் கடவுள் துகள் என்றும் ஹிக்ஸ் போஸான் என்றும் கூறப்படும் அணுத்துகள். இதை மேட்டர் (Matter) என்றும் கூறுவார்கள். இந்த மேட்டர் எனபது நமது உலகத்திலுள்ள அனைத்திலும் அணு அளவில் கலந்திருப்பது. ஆகவே, செர்ண் நிறுவனம் ஹிக்ஸ் போஸானைத் தங்களுடைய அட்லாஸ் (ATLAS) மற்றும் சி.எம்.எஸ் (CMS) சோதனைகள் கண்டுபிடித்துவிட்டதாக உலகுக்கு 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி தங்களின் வலைத்தளத்தில் அறிவித்தது. இருந்தாலும் இரண்டாவதாக வெளிப்பட்ட அணுத்துகளைப் பற்றி அவர்கள் தெரிவிக்காமல் மேலும் ஆராய ஆரம்பித்தனர். அவர்களின் ஆராய்ச்சியில் அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அவர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. இரண்டாவதாக வெளிவந்த அந்த அணுத்துகள் ஆண்டிமேட்டர் (Antimatter) எனப்படும் மேட்டருக்கு நேரெதிரான நெகடிவ் மேட்டர் (Negative Matter) ஆகும். எப்படி மேட்டர் உலகத்திலுள்ள அனைத்திலும் அணு அளவில் கலந்துள்ளதோ, அதுபோலவே ஆண்டிமேட்டர் உலக வஸ்துக்கள் இல்லாத வெற்றிட விண்வெளியில் உள்ள அனைத்திலும் அணு அளவில் கலந்திருக்கும். இந்த இரண்டு அணுத்துகள்களும் ஒன்றை ஒன்று தொட்டுவிட்டால் இரண்டும் நேரெதிர் வினையாக ஒன்றையொன்று அழித்துவிடும். அதாவது, மேட்டரும் ஆண்டிமேட்டரும் இணைந்தால் அந்த இடத்தில் இரண்டுமே அழிந்து வெற்றிடம் மட்டுமே இருக்கும். இப்படி விண்வெளியில் இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்த ஒரே சக்திமயம் மாபெரும் கருங்குழி எனப்படும் பிளாக் ஹோல்கள்தான் (Black Hole). இந்த பிளாக் ஹோல்களில் இருப்பது இருண்ட அணுத்துகள் எனும் டார்க் மேட்டர் (Dark Matter) எனும் ஆண்டிமேட்டரின் வகையாகும். ஆகவே இதன் மூலம் உலகம் உருவானது எப்படி என்கிற கேள்விக்கு இதுவரை அறிவியல் உலகம் கூறியிருந்த பதிலான பெருவெடிப்பு நிகழ்வை (Big Bang Theory) தங்களுடைய ஆலிஸ் (ALICE) மற்றும் எல்.ஹெச்.சி.பி (LHCb) சோதனைகள் மிகவும் சிறிய அளவில் நிகழ்த்திக் காட்டிவிட்டதாக செர்ண் நிறுவனம் உலகுக்கு அறிவித்தது. இருப்பினும் ஆண்டிமேட்டர் அணுத்துகள் கண்டுபிடிப்பை பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து பல செய்திகளில் தெரிவித்திருந்தும் (BBC News, CNN News, Scientific American) முழுவதும் புரிந்துகொள்ள இயலாமல் தவித்தனர். இந்த சமயத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA – National Aeronautics and Space Administration) வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவர்களைக் கவர்ந்தது.

தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் (பழைய புகைப்படம்)

நாஸா நிறுவனத்தின் கண்டுபிடிப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா பல வருடங்களாக பூமியின் காந்தப் புலத்தையும் (Earth’s Magnetic Field) அது விண்வெளியோடு எவ்வாறு வினைபுரிகின்றது என்பதையும் ஆராய்ந்து வந்தனர். அவ்வாறு அவர்கள் ஆராய்ந்து வந்த காலத்தில், செயற்கைக் கோள்களின் மூலம் (Satellite) பூமியின் தரைதளத்தை சுற்றிவந்து (Low Earth Orbit) சோதித்தபோது ஒரு ஆச்சரியம் நிகழக் கண்டனர். இந்தியாவின் (India) தெற்குப் பகுதியில் உள்ள தமிழ் நாட்டில் (Tamil Nadu) உள்ள சிதம்பரம் (Chidambaram) எனும் ஊரில் இருக்கும் தில்லை நடராஜப் பெருமான் திருக்கோயிலை (Thillai Nataraja Temple) அவர்களின் தாழ்தள செயற்கைக் கோள்கள் கடந்த போது அவற்றின் மின்ணணு இயந்திரங்கள் (Electronics) சில நொடிகளுக்குத் தவறாக வேலை செய்வதைக் கண்டுபிடித்தனர். மின்ணணு இயந்திரங்களைப் பாதிக்கும் அளவிற்கு அங்கே என்ன இருக்கின்றது என்று அவர்கள் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். மின்ணணு இயந்திரங்கள் இருவகையில் மட்டுமே பாதிக்கப்படும். ஒன்று, ஈ.எம்.பி (E.M.P) எனப்படும் அதீத காந்தசக்தித் துடிப்பு (Electromagnetic Pulse). இரண்டு, மின்னல் அளவுக்கு அதீத மின்சாரசக்தி. தில்லை நடராஜர் கோயிலில் அதீத மின்சக்தி இருக்க வாய்ப்பு இல்லாததால், அங்கே அதீத காந்தசக்தி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார்கள். உலகின் காந்தப்புல துருவம் (Geomagnetic Pole) எனப்படும் கோடின் மையப்புள்ளி (Geomagnetic Center) சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானின் திருஉருவச் சிலையின் காலுக்கு அடியில் இருப்பதைக் கண்டுபிடித்து, இதை எப்படி எந்தவித தொழில்நுட்ப உதவியுமின்றி நமது முன்னோர்கள் சரியாகக் கண்டுபிடித்து அங்குச் சிலையை வைத்தார்கள்? அப்படி அந்த சிலையில் இருக்கும் விஷயம் என்ன? சிதம்பர இரகசியம் என்று போற்றப்படும் கதை என்ன? என்று பலவாறாக ஆராயத் தொடங்கிவிட்டார்கள்.

அணுத்துகளின் அசைவுகள்
அணுத்துகளின் அசைவுகள்

செர்ண் நிறுவனத்தின் அதிசயம்

மேலே கூறிய நாஸா நிறுவனக் கண்டுபிடிப்பைத் தெரிந்துகொண்ட செர்ண் நிறுவன விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், தாங்கள் ஏற்கனவே பூகம்பம் வந்துவிடுமோ என்று பயந்தபோது கலாம் அவர்கள் கூறியபடி நிறுவியிருந்த நடராஜர் சிலைக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கின்றது என்பதுதான். கலாம் அவர்கள் இவ்வுலகை விட்டு இறைவனடி சென்றுவிட்டதால், விடைதேடி அவர்கள் சிதம்பரத்திற்கு வந்தார்கள். சிதம்பரம் வந்து தில்லை நடராஜரின் கதையையும், அவர் வடிவத்தின் காரணத்தையும் கேட்டவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நம் முன்னோர்கள், ஆடல் வல்லானாகிய இறைவனின் திருக்கோலத்தில் உலகம் உருவாக அவர் ஆடும் ஆனந்தத் தாண்டவமும், உலகம் அழிய அவர் ஆடும் ஊர்த்துவத் தாண்டவமும், அணுவெடிப்பின் சக்தியைக் குறிப்பதுபோல அவர் உருவத்தைச் சுற்றி உருவாக்கியிருந்த தீக்கற்றைகளையும், பார்த்த எதையும் பஸ்பமாக்கிவிடும் நெற்றிக் கண் சக்தியையும், தங்களுக்குத் தெரிந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதிசயித்தனர். பெருவெடிப்பு என்று அறிவியல் கண்டுபிடித்ததையே இங்கே நடராஜரின் உருவத்தைச் சுற்றி வெடித்துச் சிதறிய தீக்கற்றைகளாகப் பார்த்தனர். ஆண்டிமேட்டரும் மேட்டரும் எப்படி ஒன்றையொன்று அழித்து வெற்றிடமாகிவிடுகின்றன என்பதை இங்கே நெற்றிக்கண் பஸ்பமாக்கும் சக்தியாகப் பார்த்தனர். நாஸா ஏற்கனவே வெளியிட்டிருந்த பிளாக் ஹோலின் உருவத்தை இங்கே நெற்றிக் கண்ணின் வடிவமாகப் பார்த்தனர். அப்படியானால், தங்களுடைய சோதனையில் உருவாகிய மேட்டர் எனப்படும் கடவுள் துகளுக்கும், ஆண்டிமேட்டர் எனப்படும் இருண்ட துகளுக்கும் இங்கே விடை கிடைக்கும் என்று நம்பி நடராஜர் ஆடும் தாண்டவங்களைப் பற்றி ஆராய்ந்தனர். அதில் மிகப்பெரிய அதிசயம் கண்டு வியப்பில் மூழ்கிவிட்டனர். ஏற்கனவே தாங்கள் கண்டுபிடித்திருந்த மேட்டரையும் ஆண்டிமேட்டரையும் அவர்கள் அணுஅணுவாக ஆராய்ந்து இருந்தனர். அதில் இரண்டு அணுத்துகள்களுமே மற்ற அணுத்துகள்கள் போன்று அசைவின்றி (Motionless / Static) இல்லாமல், சக்தியூட்டப்பட்டதால் தமக்குள்ளே சுழற்சியைக் கொண்டு ஏதோவொரு புலப்படாத முறையில் எப்போதும் அசைந்து கொண்டே (Kinetic Motion / Dynamic) இருப்பதைப் பார்த்திருந்தனர். நடராஜப் பெருமானின் உலகம் உருவாக்கும் ஆனந்தத் தாண்டவத்தின் அசைவின்படியே மேட்டரின் அசைவுகளும், அவரின் உலகம் அழிக்கும் ஊர்த்துவத் தாண்டவத்தின் அசைவின்படியே ஆண்டிமேட்டரின் அசைவுகளும் இருப்பதைப் பார்த்து அதிசயித்துவிட்டனர். அவர்களின் கண்டுபிடிப்பு இப்போதுதான் முழுமையடைந்ததாக சந்தோஷம் கொண்டனர். இதில் இன்னமும் பல்வேறு ஆராய்ச்சிகள் நிகழ்வதாலும், மேலும் அறிவியல் ரீதியாக இதை இன்னமும் நிரூபிக்க இயலாததாலும், செர்ண் நிறுவனம் இந்தக் கண்டுபிடிப்பின் விஷயங்களை இன்னமும் உலகுக்கு வெளியிடவில்லை.

நடராஜரின் வடிவில் அணுத்துகளின் அசைவுகள்
நடராஜரின் வடிவில் அணுத்துகளின் அசைவுகள்

சிதம்பர இரகசியம்

உலகம் உருவானதற்குக் காரணமாக அறிவியல் இப்போது கற்பித்துக் கொள்ளும் பெருவெடிப்பு நிகழ்வுகளும், நமது பால்வெளி அண்டம் (Milky Way Galaxy) இன்னும் 6 பில்லியன் (600 கோடி) வருடங்களுக்குப் பிறகு ஒரு பெரிய பிளாக் ஹோலில் நுழைந்து முற்றிலும் பஸ்பமாகி அழிந்து போகும் என்கிற அறிவியல் கண்டுபிடிப்புகளும், மேட்டர் எனும் ஆக்கச் சக்தியும், ஆண்டிமேட்டர் எனும் அழிவுச் சக்தியும், உலக வஸ்துக்களிலேயே மிகச்சிறியதான அணுவிலும் கலந்திருக்கும் கடவுள் துகளும், சக்திமண்டலங்களாக அறியப்பெற்ற மின்சக்தி, காந்தசக்தி, அணுசக்தி, புவியீர்ப்புச்சக்தி ஆகிய சக்திமயங்களும், இவையனைத்தையும் தாண்டி அணுவைவிடச் சிறிய அணுத்துகள்களுக்கும் சக்தியூட்டி மேட்டரையும் ஆண்டிமேட்டரையும் காற்றுகூட இல்லாத வெற்றிடத்திலும் உருவாக்க வல்ல ஹிக்ஸ் ஃபீல்ட் என்று அறிவியல் கற்பித்த சக்திமயமும், ஆகிய இவையனைத்தும் இறைவன் தில்லை நடராஜப் பெருமானின் உருவத்திலேயே பொதிந்திருக்கின்றன என்பதுதான் சிதம்பர இரகசியம்.

அளவிடமுடியாதப் பெருஞ்செல்வம்

அறிவியல் ரீதியான பெயர்கள் இல்லாவிட்டாலும், மதச்சார்போடு ஒப்பிட்டுக் கூறப்பட்டாலும், நம்பமுடியாத அளவு மாபெரும் அதிசயமாகத் திகழ்ந்தாலும், அறிவியல் உலகமே இன்று கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டுபிடித்து தெரிந்துகொள்ளும் பல விஷயங்களை நம் முன்னோர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தாங்கள் உட்கார்ந்த இடத்திலேயே செய்துவந்த தியானத்தின் மூலம் தமக்குள் இறைசக்தியை உணர்ந்து, அதில் அஷ்டமா சித்திகளும் பெற்று, அண்டசராசரங்கள் அனைத்திற்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே சூட்சுமமாகப் பயணம் செய்து, தாங்கள் கண்ட, உணர்ந்த, தெளிந்த விஷயங்களை, உலக மக்கள் புரிந்துகொள்ளவும், அதன் மூலம் இறைப்பேறு எய்யவும் வேண்டி, இப்படிக் கதைகளாகவும், தெய்வ உருவங்களாகவும், அவ்வுருவங்கள் நிறுவும் கோயில்களாகவும் செய்து வைத்து, இன்றும் அவை இறைசக்தியால் அழியாமல் காப்பாற்றி நமக்குக் கொடுத்திருப்பதை விட மேன்மையான செல்வம் வேறு என்ன இருக்கின்றது இந்த உலகத்தில்?